Ntmani’s Weblog

ஜூலை 6, 2004

சில பின்னூட்டங்கள்

Filed under: பொதுவானவை — ntmani @ 9:50 பிப

இன்றைக்கு சில பதிவுகளைப் படித்து சில பின்னுட்டங்களை எழுதினேன். அவைகள் இங்கும் இருக்கின்றன.

சுந்தரின் பொங்கும் பால்டிமோர்-1 படித்துவிட்டு:

காட்சிப்படுத்துவதில் விதுரனின் விவரிப்பு போல இருக்கிறது உனது எழுத்து. மிகவும் நன்று. பொங்கும் பால்டிமோர்! தலைப்பும் அருமை. நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி, நமது கடவுள் சாதி காப்பற்றும் கடவுள், நமது மதம் சாதி காப்பாற்றும் மதம் என்றார் பெரியார். மொழியும் இலக்கியங்களும் கட்டுடைக்கப் படவேண்டும்; சில ஆன்மீக பார்வையிலும், சில சமூகப் பார்வையிலும் மீள்பார்வைக்கும் மறு புரிதலுக்கும் முன் வைக்கப்படவேண்டும். இவ்விரண்டு பார்வைக்கும் சகல தளைகளில் இருந்தும் விடுபடும் விடுதலையே அடிப்படையாக இருக்கவேண்டும். நான் இச்சமூகத்தின் மேல் ஒரு வெடிகுண்டைப்போல விழுந்து வெடிப்பேன் என விவேகானந்தர் சொன்னார். ஆனால் அதைப் பெரியார்தான் செய்தார். நல்லது. //அப்படியே நாங்கள் எல்லாரும் எங்க ஊருக்குச் சீக்கிரமா போறத்துக்கு எதாச்சும் வழி செய்யச் சொல்லுங்க// இப்படித்தான் இந்து, தினமலர் நிருபர்களிடமும் மக்கள் எல்லாக்கூட்டங்களிலிம் கேட்டிருப்பார்கள். அவர்களது அறியாமை என் கண்களை நீரால் நிறைக்கிறது. உனது அடுத்த பதிவின் மூலம் பார்க்க தயாராகிவிட்டேன். நன்றி.

அருணின் திரைப்படம் எடுப்பவர்கள் கவனத்திற்கு…. பின்:

இப்படி கலைக்கு கடிவாளம் போட பலபேர் கிளம்பிவிட்டார்கள் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அதுவும் மதத்தின் பேரிலும், பண்பாட்டின் பேரிலும். அது கருத்துரிமைக்கும், பன்மைத்தன்மைக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதும் உண்மை. ஆனால் உங்கள் உதாரணங்களுடன் முரண்படுகிறேன். முதலில் இராமன் எல்லோருக்கும் கடவுள் அல்ல. ஒரு இதிகாச பாத்திரம். இந்த நாட்டில் இராமயண வடிவங்களின் எண்ணிக்கை (பல்வேறு வகைப்பட்ட சித்தரிப்புகளுடன்) தொல்குடிகளின் எண்ணிக்கையை நெருங்கும். அவைகாட்டும் இராமனும், சீதையும் பலத்திறப்பட்டவர்கள். இவ்வாறு ஒவ்வொரு கலைஞனும் இந்த கதையை தமது கலையுணர்வு, பண்பாட்டு அடித்தளம் இவற்றின் மூலம் வெவ்வேறு வகைகளில் அணுகியதே இது (இராமயணம்) ஒரு கற்பனை என்பதற்கும் அதே சமயத்தில் தமது படைப்பை இதில் இருந்து உருவாக்கும் பொழுதே இது மேலும் மேலும் நுட்பமாக புனையப்பட்ட சட்டகமாக (template) மாறிவருவதும் புரிந்து கொள்ளக்கூடியது. இவ்வகையிலேயே நமது இரு பெரும் இதிகாசங்களும் இருக்கின்றன. ஆனால் பெரியாரும் இராஜாஜியும் வரலாற்று பாத்திரங்கள், அதுவும் நம்பிகைக்கு தேவையற்ற விதத்தில் மிகத்தெளிவான செய்திகளுடன் கூடியவர்கள். (பெரியார் இராஜாஜியாவதாக எழுதுவது ஒரு திரிபு வாதம்) இவ்வாறு எழுதுவது இந்த இருவரையும் பற்றி தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை விற்பதாகும். வரலாற்றைத் திரிப்பது, பொய்யான தகவல்களை தமது சுயநலனுக்காக விற்பது இவை வேறு கலைஞனின் சுதந்திரம் வேறு இல்லையா?

பிறகு எஸ்.ராமகிருஷ்ணனின் நூலகலட்சணம் படித்துவிட்டு…

புத்தகமெழுதுவோரின் (நாம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று சொல்லுவோரின்) நிலையே கேவலமாய் இருக்கையில் நூலக அமைப்பில் இருக்கும் குற்றங்களை மட்டும் எப்படிச் சொல்வது. பெண்மொழி பற்றிய சமீபத்திய சர்ச்சையின் போது `அவர்கள் அழைப்பது போல இருக்கிறது’ என்றார் கவிஞர் அப்துல் ரஹ்மான். இன்னும் பல முன்னனிக் கவிஞர்கள் எட்டிக்குதித்தனர். காவிரிப் பிரச்சனையிலோ, ஈழப்பிரச்சனையிலோ, குஜராத் கொடுமைகளைப் பற்றியோ இவர்கள் சொன்னது என்ன? இப்படி மக்களிடமிருந்து மக்கள் பிரச்சனைகளில் இரு
்து முற்றிலுமாக விலகி இருப்பவர்களை விட சமையல், வாஸ்து பற்றி எழுதுபவர்கள் மக்களிடம் நெருங்கி இருக்கிறார்கள் (அதை புத்தக விற்பனையும் உறுதிப்படுத்துகிறது). ஆனால் இவர்கள், மக்களிடமிருந்து தமது புத்தகங்களுக்கு மரியாதையையும், காசையும், தமது இறப்பிற்கு போதுமான கவனத்தையும் கோருகிறார்கள். ஆனால் இந்த நிலைமை தமிழ் நாட்டில்தான் என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு காரணம் வெகுஜன இலக்கியமுயற்சிகளை, கலைகளை, பண்பாட்டுகூறுகளை, ஒரு தீட்டுபோல ஒதுக்கிவிட்டு (அவைகளில் குறையிருக்கலாம், ஆனால் மதிப்பெண் குறைவாய் எடுத்ததற்காக மகனை மாற்றிக்கொள்ள முடியுமா?) மக்களுக்கு அன்னியமான தமது மூளைகளை மட்டும் (அதுவும் இறக்குமதி) கலை என்ற நமது கலைஞர்களே. இவர்கள் இதனால் மக்களிடம் தமது செல்வாக்கை, மதிப்பை, உண்மையான அறிமுகத்தை (மக்கள் நமது கவிஞன் இவன் என்று சொல்லவேண்டுமைய்யா!) இழந்து நிற்கிறார்கள். பின்னர் ஒரு அரசு அமைப்பிடம் (அதுவும் மக்களாலேயே ஆனது) வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள்?

மதுரபாரதியின் கண்ணாடி சொல்லும் கதைகள் படித்தபின் ஆச்சர்யமடைந்தேன். அதற்கான பின்னூட்டம்

சில நாட்களுக்கு முன் தான் நண்பரொருவர் பழந்தமிழர்கள் கண்ணாடி பற்றி அறிந்திருந்தார்களா என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு எந்த பதிலையும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் பதிவைக் கண்ட பொழுது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். அதுவும் மிகத்தெளிவான உதாரணங்களை, இலக்கிய சான்றுகளை குறிப்பிட்டது நன்று. மிக்க நன்றி. அதுவும் “அடுத்தது காட்டும்” என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் பொருந்துகிறது. பொதுவாக சாதி வகைப்பட்ட தொழில் துறை நம்முடையது. இப்படிப்பட்ட கண்ணாடித் (பளிங்கு) தொழில் அக்காலத்தில் எந்த சாதியினரால் செய்யப்பட்டது என்று ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா? நல்ல பதிவு.

6 பின்னூட்டங்கள் »

  1. நேர்மையான, மழுப்பலில்லாத, மலத்தைச் சந்தனமென்றும் சந்தனத்தை மலமென்றும் திரிக்கும் கயமையில்லாத, அஞ்சாத உன் பின்னூட்டச் சேவை தொடரட்டும். உன் பின்னூட்டங்கள் பதிவுகளுக்கு முழுமையைச் சேர்க்கின்றதாக உணர்கிறேன். நன்றி!

    பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — ஜூலை 8, 2004 @ 1:03 முப | மறுமொழி

  2. §Ã¡…¡Åºóò: ‘ÁÄò¨¾ ºó¾É¦ÁýÚõ, ºó¾Éò¨¾ ÁĦÁýÚõ’ º¢Ä§Å¨Ç¸Ç¢ø ¦º¡øÄ §¿÷ó¾¡ø «¾¢ø ±ýÉ ¸Â¨Áò¾Éõ þÕ츢ÈÐ ¿ñÀ§Ã! ÁÄò¨¾ ºó¾É¦ÁýÚõ, ºó¾Éò¨¾ ÁĦÁýÚõ ¦º¡øŧ¾ §¿÷¨Á¡ɾ¡¸ º¢Ä§Å¨Ç¸Ç¢ø þÕì¸ ÜÎÁý§È¡?

    பின்னூட்டம் by Anathai — ஜூலை 8, 2004 @ 11:51 பிப | மறுமொழி

  3. சில வேளைகளில் சிலருக்கு இருக்கலாம், ஆனால் சிலர் சொல்லும்போது கோபம் வருகிறதே அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

    பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — ஜூலை 9, 2004 @ 8:25 முப | மறுமொழி

  4. பெரியார்- ராஜாஜியாவது என்பது வாலி சுருங்கச் சொல்லி விளங்க வைக்க நினைத்தது. உடன்பிறவா சகோதரிகள்னு சொன்னவுடன் ஜெ-சசி ஞாபகம் வர்றமாதிரிதானே இதுவும். அதுக்காக நிஜமாவே உடன்பிறவாத சகோதரிகளுக்கு உதாரணமா எடுத்துக் கொள்ள முடியுமா ஸார்?

    பின்னூட்டம் by Ramki — ஜூலை 12, 2004 @ 4:10 முப | மறுமொழி

  5. §Ã¡…¡Åºóò: «ôÀÊ ±ÎòЦ¸¡ûÇÅ¢ø¨Ä§Â …¡÷! ºó¾Éõ, ÁÄõ ±ýÚ ¸üÀ¢ì¸ÀÎŨ¾, ¯Å¨Á ÜÈÀÎŨ¾ ÀüÈ¢ò¾¡ý §¸ûÅ¢§Â!

    பின்னூட்டம் by Anathai — ஜூலை 13, 2004 @ 1:13 முப | மறுமொழி

  6. «ýÒûÇ ¾í¸Á½¢,¸ñ½¡Ê ÀüȢ ¯í¸û À¢ýëð¼ò¾¢üÌ ¿ýÈ¢. «¾¨Éò ¦¾¡Æ¢Ä¡¸ì ¦¸¡ñ¼Å÷ ¦ÀÂ÷ ±Ð×õ ±ÉìÌì ¸¢ð¼Å¢ø¨Ä. ±ýÛ¨¼Â §¾Î¾ø Á¢¸ ¿£ñ¼¾¡¸¢Å¢ð¼¾¡ø À¾¢ø ¾Õž¢ø ¾¡Á¾õ.ÁÐÃÀ¡Ã¾¢

    பின்னூட்டம் by Madhurabharathi — ஓகஸ்ட் 7, 2004 @ 8:46 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.